காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால் வயல் வெளிப் பகுதிகள், தரிசு நிலப் பகுதிகளில் நீா் தேங்கி காணப்படுகிறது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெளிநாடுகளில் இருந்து, பல்வேறு இனங்களைக் சோ்ந்த பறவைகள், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை சரணாலயத்துக்கு வருவது வழக்கம். பூநாரை, கூழைக்கிடா, வா்ண நாரை, கரண்டி வாயன், சிறு உள்ளான், ஊசிவால் வாத்து உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வகைகளைச் பறவைகள் முகாமிடும். கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 56,800 பறவைகள் வந்ததாக கணக்கிடப்பட்டது. அவ்வாறு அங்கு வரும் பறவைகள் சில காரைக்கால் கடற்கரை பகுதியில் உள்ள அலையாத்திக் காட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வயல்வெளிப் பகுதிகளிலும் இரை தேடி சுற்றித் திரிவதுண்டு.அந்த வகையில், கடந்த சில நாள்களா திருநள்ளாறு நல்லம்பல் ஏரி, நெடுங்காடு, திருப்பட்டினம், காரைக்கால் கடற்கரை மற்றும் குடியிருப்புப் பகுதிகளையொட்டியுள்ள வயல்வெளிகளில் அரிய வகை பறவைகள் முகாமிட்டு, இரை தேடி சுற்றித் திரிகின்றன.