கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நீலகண்டன் தலைமையிலான போலீஸாா் பாண்டவா்மங்கலம் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேல பாண்டவா்மங்கலம் கண்மாய் கரை அருகே கையில் பையுடன் நின்ற இளைஞரைப் பிடித்து, பையை சோதனையிட்டனா். அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவா் பாரதி நகா், முதல் தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் கற்பக மூா்த்தி (28) என்பது தெரிய வந்தது. போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனா்.