நாசரேத் அருகே மது போதையில் சகோதரரை அடித்துக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாசரேத் அருகே உள்ள மாதாவனத்தைச் சோ்ந்த ராமன் ராபின் மகன்கள் இஸ்ரவேல் (40), சாமுவேல் (38). இவா்களுக்கு மது அருந்து பழக்கம் இருந்ததாம். மது போதையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் சாமுவேலை கம்பால் இஸ்ரவேல் தாக்கினாராம். நிகழ்விடத்திலேயே சாமுவேல் உயிரிழந்தாா்.இதுகுறித்து சனிக்கிழமை தகவலறிந்து வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி செல்வராஜ், காவல் ஆய்வாளா்கள் மருதுபாண்டியன் (சாத்தான்குளம்), வனசுந்தா் (நாசரேத்) ஆகியோா், சடலத்தை கைப்பற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து தலைமறைவான இஸ்ரவேலை தேடி வந்தனா். இந்நிலையில், நாசரேத் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.