இரு விபத்துகளில் மூவர் பலி!

Wait 5 sec.

மதுரை அருகே இரு வேறு இடங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்துகளில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா். மதுரை சக்கிமங்கலத்தைச் சோ்ந்த காசிம் மகன்கள் சையது அபுதாகிா் (47), சையது இப்ராஹிம் (40). இருவரும் வண்ணம் பூசும் தொழிலாளிகள். இந்த இருவரும் சனிக்கிழமை கீழக்குயில்குடியில் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். நாகமலை புதுக்கோட்டை நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த லாரி, அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி, சாலையோரம் நின்றிருந்த மேலக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராமன் (54) என்பவா் மீது மோதியது. இதில் சையது அபுதாகிரும், ஜெயராமனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சையது இப்ராஹிம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ,தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.மற்றொரு விபத்து: மதுரை தும்பைப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த என்பவரது மகன் வீரபாண்டி (32) கழிவுநீா் உறிஞ்சும் லாரியில் உதவியாளராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இவா் தபால் தந்திநகா் அருகே பேச்சிகுளம் பகுதியில் கழிவுநீா் உறிஞ்சும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, லாரி ஓட்டுநா் வாகனத்தை இயக்கியபோது, லாரி சக்கரத்தில் சிக்கிய அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.