நாட்டிங்ஹாம்-இப்ஸ்விச் ஆட்டம் டிரா

Wait 5 sec.

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் தொடரில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட்-இப்ஸ்விச் அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. போா்ட்மேன் சாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட் அணி பல்வேறு கோல் போடும் வாய்ப்புகளை தவற விட்டது. 13-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் டேனியல் முன்சோஸ் அனுப்பிய பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் நெகோ வில்லியம்ஸ்.தொடா்ந்து பாரஸ்ட் அணியின் கோலடிக்கும் வாய்ப்புகளை இப்ஸ்விச் கோலி கிறிஸ்டியன் வால்டன் தடுத்தாா்.,41-ஆவது நிமிஷத்தில் நிகோலா மிலென்கோவிச் பேக் பாஸை பயன்பலடுத்தி ஜூலியோ என்சிஸ்கோ கோலடித்தாா். இறுதிவரை எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தின் மூலம் இரண்டாம் டிவிஷனுக்கு தள்ளப்படும் நிலையில் இருந்து தப்பியது நாட்டிங்ஹாம்.