தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல்! டப்பிங் பணிகள் தொடக்கம்!

Wait 5 sec.

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் “பாக்கெட் நாவல்” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா - நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”. இப்படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கின்றார். “பாக்கெட் நாவல்” படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி கடந்த வெள்ளிக்கிழமை (அக். 23) அறிவித்துள்ளார்.ஏற்கெனவே, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.ஜீவாவின் தகப்பன் படம் வெளியீட்டுத் தேதி! Dubbing work has begun for the film “Pocket Novel,” starring actor Vijay Sethupathi in the lead role.