சீர்காழி அருகே தூக்கில் தந்தை, ரத்த வெள்ளத்தில் இறந்துபோன தாய், மகன் மீட்பு: கொலையா? தற்கொலையா?

Wait 5 sec.

சீர்காழி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் தந்தை, ரத்த வெள்ளத்தில் இறந்துபோன தாய், மகன் சடலத்தை மீட்ட சீர்காழி காவல்துறையினர், அது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜலேந்திரன் (55) மீனவர். இவர் மனைவி மலர்செல்வி, மகன் அதிகுணன் ஆகியோர் வசித்து வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஐலேந்திரன் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் உள்ளே சென்று ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டில் மலர் செல்வி, அதிகுணன் ஆகிய இருவரும் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். சில அடி தூரத்தில் மீனவர் ஜலேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், இது குறித்து சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் காவலர்கள், இறந்த மூவரின் சடலத்தையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து அந்த பகுதியில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கொலையா? தற்கொலையா?, மனைவி மற்றும் மகனை கொலை செய்துவிட்டு கணவர் ஜலேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Father hanged near Sirkazhi, mother and son found dead in a pool of blood rescuedமேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு 1,000 கனஅடியாக குறைப்பு