ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்த மஹிலா ஜெயவர்தனே சமீபத்தில் பதவி விலகிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. சிஎஸ்கேவும் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. சமீபத்தில் சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகி, ஜகீர் கான் நியமிக்கப்பட்டார். தற்போது, அதே போல மும்பையில் மஹிலா ஜெயவர்தனே விலகி, கைரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைசிறந்த ஆல்ரவுண்டராக இருந்த பொல்லார்டு பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். தற்போது, தலைமைப் பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து பங்காற்றி வருகிறார். இந்த சிறந்த முடிவுக்கு மும்பை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். LLORD's legacy from player to coach was built brick by brick! pic.twitter.com/HKwRt3HKdP— Mumbai Indians (@mipaltan) October 24, 2026Mumbai Indians elevate Kieron Pollard as Head CoachA defining figure in MI’s success, the remarkable 16-year association of Kieron Pollard within the #OneFamily enters a new chapter.Read more - https://t.co/ORZz4gruIr pic.twitter.com/BMI38BYH1f— Mumbai Indians (@mipaltan) October 24, 2026Kieron Pollard appointed as head coach of Mumbai Indians!