அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.390 கோடியில் ஹீரோ சைக்கிள்!

Wait 5 sec.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் ஹீரோ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆட்சியிலும் வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவமைப்புடன் வழங்கப்படுகிறது.தவெக ஆட்சியிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான டெண்டர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோரப்பட்டது.இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்காக சைக்கிள்களை வழங்க ஹீரோ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, சூப்பர் சைக்கிள் திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ. 277 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ. 115 கோடி ஒதுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.மாநிலத்தில் 5.32 லட்சம் மாணாக்கர்களில் மாணவர்களுக்கு ரூ. 7,235 மதிப்பிலும், மாணவியருக்கு ரூ. 7,476 மதிப்பிலும் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. சைக்கிள்களுடன் சேர்த்து தலைக்கவசமும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படவிருக்கிறது.ஸ்வீட் எடு, கொண்டாடு! குழந்தைகள் நாளில் 62.4 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்குகிறது தமிழக அரசு!Hero Cycles for Students worth Rs. 390 Crores