ஆஸ்திரேலியாவில், கார் தாக்குதலுக்கு ஆளான பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் 2 கால்களும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வாங்கரட்டா நகரத்தில் கடந்த திங்களன்று (அக். 21) சுயட்ச்சை நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலன் ஹெய்ன்ஸ் (வயது 65) என்பவர் மீது பிரெண்டன் நுகெண்ட் (43) எனும் நபர் காரால் மோதி தாக்குதல் நடத்தினார். முதல்முறை ஹெலன் மீது காரால் மோதிய நுகெண்ட் உடனே தனது காரை பின்னால் கொண்டு சென்று மீண்டும் அவர் மீது மோதி அவரை மற்றொரு காருடன் வைத்து நசுக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த ஹெலன் ஹெலிகாப்டர் மூலம் மெல்பர்ன் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், மெல்பர்ன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஹெலனின் 2 கால்களும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும்; இருப்பினும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரது கணவர் ஃபில் ஹெயின்ஸ் இன்று (அக். 21) தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரெண்டன் நுகெண்ட் உளவியல் மற்றும் நரபியல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.கியூபா முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு அமெரிக்காவில் பிடியாணை! சீனா கண்டனம்! In Australia, a female MP who was hit by a car has reportedly had both legs surgically removed.