சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்இடையே அக். 23 முதல் குளிர்சாதன மின்சார ரயில்!

Wait 5 sec.

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் 12 பெட்டிகள் அடங்கிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.வரும் அக். 23 ஆம் தேதி முதல் டிச. 24 ஆம் தேதி வரை திங்கள் முதல் வெள்ளி வரை சோதனை அடிப்படையில் குளிர்சாதன மின்சார ரயில் இயக்கப்படும்.சென்னை சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குளிர்சாதன மின்சார ரயில்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயனிகள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து குளிர்சாதன மின்சார ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பயணிக்கும் பணியாளர்கள், மாணவர்களின் வசதிக்காக புதிய ஏசி மின்சார ரயில் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டதுஇந்த ரயில், பயணிகள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Southern Railway has announced that a 12-coach air-conditioned electric train will be introduced on the Chennai - Arakkonam route.மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஸ்டாடோம் பெட்டி இணைப்பு! இனி இயற்கையை ரசிக்கலாம்