பிக் பாஸ் வீட்டில் பலவீனமான 3 போட்டியாளர்கள்! பட்டியலிட்ட நடிகை சாந்தினி!

Wait 5 sec.

பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்கள் குறித்து நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் 5 வது வாரத்தின் இறுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக நடிகை சாந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாந்தினி, பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்கள் குறித்துப் பேசியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமுமே நாமினேஷனில் இருப்பேன். ஆனால் இந்த வாரம் நான் வெளியேறிவிடுவேன் என என் உள்ளுணர்வு கூறியது.அதன்படி நானே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்கள் உள்ளே உள்ளபோது நான் வேளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேண்டுமென்றே என்னை நாமினேஷன் பட்டியலில் வைத்துவிட்டனர்.தன்யா, பிருத்வி, அஸ்மிதா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்களாக உள்ளனர். அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நீடித்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். பிக் பாஸ் வீட்டில் யாரும் என்னுடன் மோதல்போக்கில் ஈடுபடவில்லை என்றும், கரீஷ்மாவுடன் மட்டும் முரண்பாடு ஏற்பட்டதாகக் கூறினார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் மிகவும் நெருக்கமான தோழியாக இருந்த அஸ்மிதா உடனும் சண்டை ஏற்பட்டது வியப்பாகத்தான் இருக்கிறது எனக் குறிப்பிட்டார். பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் வினோத் பாபு! குவியும் பாராட்டுகள்!Actress Chandini lists the weakest contestants in the Bigg Boss house