வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகைகள் பாதுகாப்பாக உள்ளதாக எஸ்பிஐ வங்கி புதன்கிழமை (அக். 21) விளக்கம் அளித்துள்ளது.ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மீது இணையவழித் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடி ’டார்க் வெப்’பில் வெளியிட்டுள்ளது.இந்தத் தாக்குதல் எஸ்பிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து எஸ்பிஐ அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:சமீபத்தில் நடந்த தரவுக் கசிவு, மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை மட்டுமே பாதித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இது வங்கியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதிச் செயல்திறன் அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.வாடிக்கையாளர்களின் இருப்புத்தொகைகள் பாதுகாப்பாக உள்ளன. மேலும், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க எங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எங்கள் வாடிக்கையாளர்களின் சொத்துகள், தரவுகள் ஆகியவற்றின் பாதுகாப்பும் எங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எங்களுக்கு மிக முக்கியம். அவை எங்களது முதன்மையான முன்னுரிமைகளாகத் தொடர்கின்றன என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எஸ்பிஐ விளக்கம்தரவுகள் திருட்டு! எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா? அடுத்த 6 மாதங்களுக்கு கவனம்! SBI Bank clarified on Wednesday (Oct. 21) that customers' bank balances are safe.