மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்கிழக்கு நோக்கி நகர்ந்து, நேற்று (அக். 24 ) வடமேற்கே ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் தீவுகள்) சுமார் 470 கி.மீ. தொலைவிலும் தென்கிழக்கே விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 860 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 950 கி.மீ. தொலைவிலும் கிழக்கே மச்சிலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 1,060 கி.மீ. மற்றும் பாபட்லாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 1,130 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.இது தெற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (அக். 25) மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் படிப்படியாக நகரும்.தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக். 26 ஆம் தேதி காலைக்குள் மேலும் வலுப்பெற்று புயலாகவும், அக்டோபர் 27 ஆம் தேதி காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தீவிர புயலாகும் புயலாகவும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.The Depression over Eastcentral and adjoining Southeast Bay of Bengal moved southeastwards with speed of 8 kmph during past 6 hours, lay centered at 2330 hours IST of yesterday, the 24th October, 2026 over the same region, near Latitude 15.5°N and Longitude 91.0°E, about 470 km north-northwest of Sri Vijaya Puram (Andaman Islands), 860 km east-southeast of Vishakhapatnam (Andhra Pradesh), 950 km east-southeast of Kakinada (Andhra Pradesh), 1060 km east of Machilipatnam (Andhra Pradesh) and 1130 km east of Bapatla (Andhra Pradesh).It is very likely to move nearly southwards, intensify into a Deep Depression and then gradually recurve west-northwestwards over the Eastcentral & adjoining Southeast Bay of Bengal on 25th October, 2026. Continuing to move west-northwestwards, it is very likely to intensify further into a cyclonic storm over the Eastcentral & adjoining Westcentral Bay of Bengal by 26th October morning, and into a severe cyclonic storm over westcentral Bay of Bengal around morning of 27th October, 2026.Thereafter, it is very likely to move northwestwards, intensify further into a very severe cyclonic storm and reach Westcentral Bay of Bengal near Andhra Pradesh coast around morning of 28th October, 2026. It is very likely to cross Andhra Pradesh & Yanam coasts between Bapatla and Visakhapatnam as a very severe cyclonic storm with the maximum sustained wind speed of 115-125 kmph gusting to 140 kmph by forenoon of 28th October, 2026.— India Meteorological Department (@Indiametdept) October 24, 2026 பின்னர், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறி, அக். 28 ஆம் தேதி காலை வாக்கில் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகே மத்திய மேற்கு வங்கக் கடலை அடைய அதிக வாய்ப்புள்ளது. இது பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரையை அடையும் போது குறைந்தபட்சமாக மணிக்கு மணிக்கு 115-125 கி.மீ. வேகத்துடனும் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. வேகத்துடனும் அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.The India Meteorological Department has said that the low-pressure area over the central and adjoining southeastern Bay of Bengal is likely to make landfall as a very severe cyclonic storm.தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!