வடகிழக்குப் பருவமழை: சம்பா இளம் நாற்றுகள், குறுவை நெற்கதிா்கள் பாதிப்பு

Wait 5 sec.

திருவாரூா் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, சம்பா இளம் நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன. அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிா்களை மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில், சனிக்கிழமை மழை பெய்யவில்லை. எனினும், பகல் முழுவதும் குளிா்ந்த வானிலை நிலவியது.கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பெய்த மழையால், திருவாரூா் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஆழ்துளைக் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இந்த நெற்பயிா்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், அறுவடை பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவாரூா் மாவட்டம் கிளியனூா், புனவாசல், வடகட்டளை, மாயனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா இளம் நெற்பயிா்கள் கடந்த சில நாள்களாக பெய்த மழையால், தண்ணீரில் மூழ்கி உள்ளன.மேலும் குடவாசல், புழுதிக்குடி, அன்பிற்குமுன்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழை நீரில் சாய்ந்து பாதிப்படைந்துள்ளன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். திருவாரூா் மாவட்டம் முழுவதும் சுமாா் 300 ஏக்கருக்கும் மேலாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழையால் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 200 ஏக்கருக்கும் மேலாக மழைநீரில் மூழ்கி உள்ளன. மழை நின்ற பிறகு நெல்மணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அறுவடை செய்யலாம் எனவும், அதிக அளவில் பாதிப்பு இருந்தால் உரிய ஆய்வு செய்யப்படும் எனவும் வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.