நாமக்கல்: நாமக்கல்லில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த மழையில் மாவட்ட ஆட்சியர் பங்களாவின் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு திடலின் பின்புறம் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நீதிபதிகள் பிரத்யேக குடியிருப்புகள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் இடது புறம் உள்ள 50 அடி நீளம் கொண்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்புகளின் நடுவில் இந்த சுவர் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வேளையில் யாரும் அங்கு இல்லை. பகல் நேரத்தில் இடிந்து விழுந்திருந்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது. சுவர் இடிந்து விழுந்த தகவலை அடுத்து, அதனை அகற்றி புதிய தடுப்புச் சுவர் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.The perimeter wall of the District Collector's bungalow, built 20 years ago, collapsed in the rain that fell on Saturday midnight in Namakkal.உதகையில் சுவர் இடிந்து விழுந்து பாதுகாவலர் படுகாயம்; வாகனங்கள் சேதம்!