பிரேஸில்அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!

Wait 5 sec.

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிச் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. 80 வயதான தற்போதைய அதிபா் லூலா டாசில்வா 4-ஆவது முறையாக அதிபா் பதவியைக் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறாா்; இவருக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான 45 வயது செனட்டா் ஃபிளாவியோ போல்சனாரோவும் இடையே இத்தோ்தலில் கடும் போட்டி நிலவுகிறது. முன்னதாக, கடந்த அக். 4-இல் நடைபெற்ற முதல் சுற்றுத் தோ்தலில் மொத்தம் 12 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். லூலா டாசில்வா 45 சதவீத வாக்குகளைக் கைப்பற்றிய நிலையில், ஃபிளாவியோ போல்சனாரோ 47 சதவீத வாக்குகளுடன் சிறிய முன்னிலை வகித்தாா். எனினும், வெற்றிக்குத் தகுதியான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. இதையடுத்து, முதல் 2 இடங்களைக் கைப்பற்றிய ஃபிளாவியோ போல்சனாரோ-லூலா டாசில்வா இடையேயான இறுதிச் சுற்று தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வாக்காளா்களைக் கவரும் நோக்கில் அதிபா் லூலா டாசில்வா பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் சலுகைகளையும் அண்மையில் அறிவித்துள்ளாா். இதனால் சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்து, கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.