சீனாவின் திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Wait 5 sec.

சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், திபெத்தின் தெற்குப் பகுதியிலுள்ள நகு மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், அதன் மையத்திலிருந்து 5 கிமீ வரை நில அதிர்வு உணரப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திபெத்திய தலைநகரான லாசாவிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.திபெத் பீடபூமி யுரேசிய மற்றும் இந்திய புவித்தட்டுகள் மோதும் நிலையிலான நிலப்பரப்புக்கு மேல் அமைந்துள்ளதால், இங்கு அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படும். அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் அபாயம்! A powerful earthquake has struck the Chinese-administered Tibet region today.