விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி: முதல் பாடல் அறிவிப்பு!

Wait 5 sec.

விஜய் ஆண்டனி நடித்துள்ள அப்பா குட்டி படத்தின் முதல் பாடல் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இந்தப் படம் தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.அப்பா குட்டி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.Vijay Antony's Appa Kutty: First song announced!ஆர்யாவின் ஹலோ காதல் - முதல் பாடல் அறிவிப்பு!