சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வீரமணி உள்பட 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு மனு அளித்துள்ளனர்.சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி, அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்கின்றனா்.ஏற்கெனவே அக். 15 முதல் 17 ஆம் தேதி வரையில் இரு நாள்கள் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகிய நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனு அளித்துள்ளது.நால்வரிடமும் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.இதனிடையே, விசாரணை என்ற பெயரில் வீரமணியை சிறப்புப் புலனாய்வுக் குழு துன்புறுத்துவதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வீரமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இபிஎஸ் மீது அவதூறு! அதிமுகவுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர முடியாது: மன்னிப்புகோர நிர்மல் குமார் மறுப்புSIT petitions to re-arrest 4 people including POCSO Veeramani for questioning