ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின.இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.இதில், கலந்துகொண்டு பதக்கங்களை வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் நவீன் சிவகுமாருக்கு தமிழக அரசு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக முதல்வர் விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நவீன் சிவகுமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்.வீரர் நவீன் சிவகுமார் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்திட வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கு 20-வது தங்கம்! 400மீ தடகளத்தில் அசத்திய திலீப் காவிட்! Bronze in badminton: Tamil Nadu player Naveen Sivakumar gets Rs. 30 lakh incentive!