விஜய்க்கு எதிராக திமுக பிரச்னை கொடுத்தபோது முதல் ஆளாக கேள்வி எழுப்பியதாக வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.வீ தி லீடர்ஸ் அமைப்பின் பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது, "அடுத்தாண்டு தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்துவிடும். அதற்குள்ளாக 8 லட்சம் பேரை நாம் தயார்ப்படுத்தியாக வேண்டும்.எனக்கும் விஜய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரை நேரில் பார்த்தது கிடையாது. அவரும் என்னை பார்த்தது கிடையாது.ஆனால், தேர்தலுக்கு முன்பு தவெகவுக்கு அப்போதைய திமுக அரசு பிரச்னை கொடுத்தபோது எதிர்த்து கேள்வி கேட்டது நான் மட்டுமே. சரியோ தவறோ நியாயமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.தவெக அரசு சில விஷயங்களை சரியாகச் செய்தால், சரி என்று சொல்வேன். தவறு என்றால் தவறு என்று சொல்வேன். இந்த அடிப்படைப் புரிதல் நம்முடைய இயக்கத்தின் 21 லட்சம் உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும்.எல்லோருக்கும் எல்லா விதமான கருத்தும் இருக்கும். எல்லா விதமான கொள்கைகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். திமுக, அதிமுக, நாதக என திராவிட கட்சிகள், தனி தேசியம் பேசும் கட்சிகளின் மாறுபட்ட கொள்கைகளில் இருந்தும் வருகின்றனர். எல்லோருடைய கருத்துகளையும் நாம் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.மாற்றத்தைப் பேசுவது எளிது; நடத்திக் காட்டுவது கடினம்: அண்ணாமலைWe The Leaders Annamalai has said that he has no connection with CM Vijay