ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை

Wait 5 sec.

ஜம்முவில் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள நெல் வயலில் இருந்து ட்ரோன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்முவின் மக்யால் கிராமத்தைச் சேர்ந்த விஜய் குமார் என்பவருக்குச் சொந்தமான வயலில், சனிக்கிழமை மாலை கைவிடப்பட்ட நிலையில் ட்ரோன் கண்டறியப்பட்டது. இதைக் கவனித்த குமார், உடனடியாக இதுகுறித்து கனா சக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர், அந்த ட்ரோனைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த ட்ரோன் பாகிஸ்தானிலிருந்து வந்ததா அல்லது உள்ளூர் நபர் யாராவது இயக்கியதா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இதனிடையே ட்ரோனின் இயக்கம் மற்றும் அதன் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எல்லைப் பகுதியில் ட்ரோன் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. A drone was discovered in a paddy field near the International Border in Jammu on Saturday evening, prompting the police to launch an investigation.ஜெர்மனியில் ஹிட்லரின் மாளிகையில் பயங்கர தீ விபத்து: ஒருவர் கைது