5-வது முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா!

Wait 5 sec.

நடிகை நயன்தாரா தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா நடித்து முடித்த மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ.6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில், நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், தர்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்தே ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து 5-வது முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார். நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தர்மன் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிரித்து, சிரித்து சீன் கதையைக் கேட்டேன்: சூர்யா It has been announced that actress Nayanthara has joined the film Dharman.