ஹார்ட் பீட் நடிகை நடிக்கும் புதிய தொடர் மேடம் போலீஸ்!

Wait 5 sec.

பிக் பாஸ் பிரபலம் திவ்யா கணேஷ் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர் நடிகை பிரேமிகா சேகர் ஆகியோர் மேடம் போலீஸ் என்ற புதிய தொடரில் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.காவல் நிலையம் மற்றும் காவலர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.ஜியோ ஹாட்ஸ்டாரில் போலீஸ் போலீஸ் இணையத் தொடர் ரசிகர்களிடையே பிரபலமடைந்து, தற்போது இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆஹா ஓடிடியில் தூள் பேட் போலீஸ் ஸ்டேசன் இணையத் தொடரும் ரசிகர்கள் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிலையில், சோனி விழா சேனலில் மேடம் போலீஸ் என்ற புதிய தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் மேடம் சார் என்ற ஹிந்தி மொழி தொடரின் தழுவலாக எடுக்கப்படுகிறது.பிக் பாஸ் பிரபலம் திவ்யா கணேஷ் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர் நடிகை பிரேமிகா சேகர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.நகைச்சுவை பாணியில் எடுக்கப்படும் மேடம் போலீஸ் தொடரின் ஒளிபரப்பு தேதி, ஒளிபரப்பு நேரம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிகை திவ்யா கணேஷ் பாக்கியலட்சும், அன்னம், மகாநதி உள்ளிட்ட தொடர்களிலும் நடிகை பிரேமிகா சேகர் ஹார்ட் பீட் தொடரில் சிந்து பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.Bigg Boss fame Divya Ganesh and 'Heartbeat' web series actress Premika Sekar are playing lead roles in a new series titled 'Madam Police'.போலீஸ் போலீஸ் - 2 இணையத் தொடர் படப்பிடிப்பு தொடக்கம்! விரைவில் ஒளிபரப்பு!