விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியான 25 நாள்களில் இதுவரை, ரூ. 260 கோடி வசூல் செய்துள்ளதாக திங்கள்கிழமை (செப். 7) அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் 40 வயது தொழிலதிபரான சூர்யா, அக்குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை உடல்நலக் குறைபாட்டைக் குணப்படுத்தப் போராடுவதுடன் கூடிய குடும்ப கதையாக அமைந்துள்ளது.இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிமகாக வசூல் செய்து சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து, வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவே அமைந்து, உலகளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும், “மனதை நெகிழ வைக்கும் இந்த பிளாக்பஸ்டர் திரைப்படம், 25 நாள்களாக உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. THE ONE DID IT IN STYLE ❤️#VishwanathAndSons crosses a MASSIVE ₹260 CRORES+ Worldwide Gross 25 days of heartfelt blockbuster and still running successfully in cinemas near you #BlockbusterVAS #BlockbusterVishwanathAndSons@Suriya_offl #VenkyAtluri… pic.twitter.com/eoo8qoTS7J— Sithara Entertainments (@SitharaEnts) September 7, 2026சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் நடித்துள்ள படத்தின் பெயர் அறிவிப்பு!It was announced on Monday (Sept. 7) that the film Viswanath and Sons has grossed ₹260 crore in the 25 days since its release.