பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (செப். 7) தெரிவித்தார்.நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். பிகாரின் கருவூலம் காலியாகிவிட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஓய்வூதியம் போன்ற வழக்கமான திட்டங்களுக்கான செலவுகளைச் செய்வதற்காகக் கூட, வெள்ளம் வருவதற்குச் சற்று முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதத்தில், பிகார் அரசு அவசரக்கால நிதியிலிருந்து ரூ. 4,000 கோடி எடுத்தது என்ற விஷயத்தை நான் தொடர்ந்து எழுப்பி வருகிறேன். அவசரக்கால நிதியிலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் பணத்திற்கான விலையை இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் துயரப்படுகிறார்கள்; அதனால்தான் நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தில் நான் ஏழு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். பிகாரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும், மாநிலத்திற்கு ரூ. 5,000 கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதுமே எனது முதல் கோரிக்கை எனக் குறிப்பிட்டார். தில்லி மாணவர் விடுதி விபத்து: 7 கோரிக்கைகளை முன்வைத்த சிஜேபி!Bihar be declared a national disaster RJD leader Tejashwi Yadav