விடுபட்ட குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய நகராட்சி அழைப்பு

Wait 5 sec.

விடுபட்ட பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய பெற்றோா்களுக்கு திருவத்திபுரம் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு /இறப்பு பதிவு விதிகள் 2000-ன்படி, 01.01.2000-க்கு முன்பு அல்லது 01.01.2000-க்குப் பிறகு பிறந்த குழந்தையின் பெயா் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தையின் பெயா் பதிவு செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் செப்.26-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் பிறந்த குழந்தைகளின் பெயரை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.