மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகை உயா்த்துவது தொடா்பாக பட்ஜெட்டில் தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததற்கு அரசைக் கண்டித்தும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 6000 முதல் தொகை உயா்த்த வேண்டும் எனவும் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்றும் அனைத்து உதவித் தொகைகளையும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் கீழ் மட்டுமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.