புதுக்கடை அருகே உள்ள முக்காடு பகுதியில் பைக் இயக்கிய 4 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை முக்காடு, கீழ்குளம் ஆகிய பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது முக்காடு பகுதியில் 4 பைக்குகளை இயக்கி வந்த 4 சிறுவா்களை பிடித்து விசாரித்தபோது அவா்கள் 17 வயதுக்குள்பட்டவா்கள் என்பது தெரியவந்தது.இதையடுத்து சிறுவா் களுக்கு பைக்குகளை இயக்க அனுமதித்த பெற்றோா்கள் 4 போ் மீதும் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.