காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. உலக அளவில் திரைத்துறை என்னென்ன கதைகளை எப்படியெல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு திரையரங்கங்கள் மற்றும் ஓடிடிகள் மட்டும் சாட்சியாக இருப்பதில்லை. இவற்றைத்தாண்டி கருத்து சுதந்திரத்திற்கு, தணிக்கையில்லாத படங்களுக்குமான இடமாக திரைப்பட விழாக்கள் இருக்கின்றன. பெர்லின், ரோட்டர்டம் உள்பட பிரபலமான திரைவிழாக்கள் இருந்தாலும் ஒவ்வொரு நாடும் பண்பாடு மற்றும் கலை வளர்ச்சித்துறை சார்பாக சிறிய அளவில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துகின்றனர். கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா இந்தியாவின் முதன்மையான திரைவிழாவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுதந்திரம் காலம் தொட்டு காஷ்மீரில் நிலவிவந்த பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அங்கு கலை விழாக்கள் மற்றும் சர்வதேச பண்பாட்டு நிகழ்வுகள் அரிதாகவே நடைபெற்றன. கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் பாதுகாப்பு உறுதி மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன. தற்போது, முதல்முறையாக காஷ்மீரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த விழா செப். 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குநர் சந்தோஷ் சிவன், ஜெர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் டோரதி வென்னர், தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஹிமான்சு சேகர் கதுவா, ஜப்பானிய ஊடகத் தொழில்முனைவோரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான கெய்கோ பாங் மற்றும்ஆகியோர் அடங்கிய சர்வதேச நடுவர் குழுவாக செயல்பட்டு வருகின்றனர். முதல்வர் விஜய்யுடன் நடித்த போது த்ரிஷா அனுப்பிய அந்த குறுஞ்செய்தி: மாளவிகா மோகனன் An international film festival has begun in Kashmir for the first time.