பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் பங்கேற்ற சீரியல் நடிகர், நடிகைகள்!

Wait 5 sec.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த முறை சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் 6 பேர் பங்கேற்றுள்ளனர். தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று (செப். 6) கோலாகலமாகத் தொடங்கியது. தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் என்றாலே வித்தியாசம், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதால், இம்முறை மிகுந்த வித்தியாசமாக மேடையில் இருந்தே போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எப்போதுமே போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை எந்த போட்டியாளர் உள்ளே செல்ல வேண்டும் என்பதற்கே மக்கள் வாக்களிக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மக்கள் பிரதிநிதிகளாக பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷாமா, முனியம்மா, ஜேசன் ஆகிய 3 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். குமரன் தங்கராஜ்வழக்கமாக சின்ன திரை தொடர்களில் இருந்து அதிக போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம். இம்முறை லஷ்மி பிரியா, குமரன் தங்கராஜ், சாதிகா, வினோத் பாபு, முத்தழகி, அவினாஷ் ஆகியோர் மட்டுமே சின்ன திரை தொடர்களில் நடித்தவர்கள். மற்ற போட்டியாளர்கள் அனைவருமே இன்ன பிற துறை மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளைச் சேர்ந்தவர்கள். முத்தழகிவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைச் சேர்ந்த பிரபலங்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பங்கேற்று வருவதாக கடந்த முறை விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் தொகுப்பாளர்கள் பெறும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?TV serial actors and actresses who participated in Bigg Boss 10