இந்திய டி20 வீராங்கனை ஷஃபாலி வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவை முந்தி முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அத்திருந்தார். அதனால் அவருக்கு ஆட்ட நாயகி விருது அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இதுவரை 115 சர்வதேச டி20 போட்டிகளில் 3,069 ரன்கள் குவித்துள்ளார். அதில் இந்தாண்டில் மட்டுமே 593 ரன்கள் குவித்துள்ளார். இந்த அரைசதத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தாண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார். 2026: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்1. ஷஃபாலி வர்மா - 593 ரன்கள் 2. ஸ்மிருதி மந்தனா - 590 ரன்கள்3. ஹர்மன்ப்ரீத் கௌர் - 465 ரன்கள்4. ஜெமிமா ரோட்ரிக்ஸ் - 345 ரன்கள்5. ரிச்சா கோஷ் - 231 ரன்கள்Shafali Verma's decisive knock earns her the in Semi-Final 1 ⭐#DPWorldWomensAsiaCup2026 #INDWvBANW #ACC pic.twitter.com/FPxF6HncOF— AsianCricketCouncil (@ACCMedia1) September 10, 2026Shafali Verma surpasses Smriti Mandhana to become India’s leading run-scorer in T20Is in 2026