சர்தார் - 2, மண்டாடி திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் நேற்று (செப். 10) திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.இந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து மண்டாடி திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 4.70 கோடியையும் சர்தார் - 2 ரூ. 4.50 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்தார் முதல் பாகம் ஹிட் அடித்ததால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், நடிகர்கள் கார்த்தி, எஸ்ஜே சூர்யா, மாளவிகா மோகனன் என பெரிய பட்டாளமே இருந்தனர். ஆனாலும் சூரியின் திரைப்படத்திற்கே அதிக டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரியின் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படமாகவும் மண்டாடி மாறியுள்ளது. நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படம் ரூ. 90 கோடிக்கும் அதிகமான பொருள்செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யாவைத் தாக்கிய சிவகார்த்திகேயன்?Information regarding the first-day box office collections of the movies Sardar 2 and Mandadi has been released.