கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 போ்கைது

Wait 5 sec.

திருப்பூரில் கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெங்கமேடு அருகே போலீஸாா் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரிடம் சோதனை மேற்கொண்டபோது, 1.150 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (31), விஜயகாந்த் (38) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.திருப்பூா் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் வியாக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அமித்குமாா் (19) என்ற இளைஞரிடம் சோதனை மேற்கொண்டபோது, 800 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, அமித்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனா்.