மும்பை: உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கிப் பங்குகளில் ஏற்பட்ட விற்பனையை தொடர்ந்து, இன்றைய நிலையற்ற அமர்வில், இந்திய குறியீடுகள் சரிவிலிருந்து மீண்டு, மீண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் $109 ஆக உயர்ந்ததால், இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி, அமர்வின் பெரும்பகுதி எதிர்மறைப் போக்கிலேயே பயணித்தது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 23,231.40 என்ற குறைந்தபட்ச அளவைத் எட்டியது. அதே நேரத்தில் சென்செக்ஸ் 740 புள்ளிகள் வரை சரிந்தது முதலீட்டாளர்களை அச்சத்தில் அழ்த்தியது. இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிதமான தொய்வு, பங்குச் சந்தையில், விற்பனை அழுத்தத்தை வெகுவாக குறைக்க வழிவகுத்தது.இருப்பினும், உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கிப் பங்குகளில் காணப்பட்ட விற்பனை காரணமாக, நிலையற்ற வர்த்தக அமர்வில், இந்திய குறியீடுகள் சரிவிலிருந்து கணிசமாக மீண்ட நிலையில், பிறகான வர்த்தகத்தில், சரிவுடன் நிறைவடைந்தன.வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 120.83 புள்ளிகள் சரிந்து 74,781.76 ஆகவும், நிஃப்டி 79.70 புள்ளிகள் சரிந்து 23,398.10 புள்ளிகளாக நிலைபெற்றது. சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ஐ.டி.சி ஆகிய பங்குகள் உயர்ந்ன.நிஃப்டி-யில் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் சரிந்தன.துறைகளைப் பொறுத்தவரை, நிஃப்டி தனியார் வங்கி குறியீடு 0.5% உயர்ந்த நிலையில் மெட்டல் மற்றும் ரியல்டி குறியீடுகள் தலா 2 சதவீதமும், ஆட்டோ, எனர்ஜி, ஆயில் & கேஸ் மற்றும் பொதுத்துறை வங்கி குறியீடுகள் தலா 0.5% சரிந்தன.இந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 2 சதவீதமும் சரிந்தன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.26 சதவீதமும் மற்றும் ஸ்மால்கேப் குறியீடு 0.6 சதவீதம் சரிந்தன.வெல்ஸ்பன் கார்ப், ரெடிங்டன், ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், லாரஸ் லேப்ஸ், எஃப்எஸ்என் இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ், டிவிஸ் லேப்ஸ், சென்னை பெட்ரோ உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வார உச்சத்தை எட்டியது.ஹெச்இஜி, குஜராத் எனர்ஜி, முத்தூட் ஃபைனான்ஸ், ஐஇஎக்ஸ், பிகாஜி ஃபுட்ஸ், ஐஆர்கான் இன்டர்நேஷனல், அம்புஜா சிமெண்ட்ஸ், செல்லோ வேர்ல்ட், ஸ்ரீ சிமெண்ட், ஆதித்யா பிர்லா ஃபேஷன், ஏசிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹேவெல்ஸ் இந்தியா, ரயில் விகாஸ் நிகம், ஐசிஐசிஐ லோம்பார்ட், ஐஆர்எஃப்சி, ஜென்சார் டெக்னாலஜிஸ், ஐஆர்சிடிசி, பிஐ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட 180 க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்தபட்ச நிலையை எட்டியது.தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 438.24 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் கணிசமாக சரிந்தன. அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவுடன் நிறைவடைந்தன.உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.95 சதவீதம் உயர்ந்து 108.7 அமெரிக்க டாலராக உள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 14, 2026, பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.Indian benchmark indices recovered sharply from the day’s lows to end marginally lower on September 11.தமிழகத்தில் ரூ.779 கோடியில்புதிய மின்சார வாகன ஆலை:அல்ட்ராவயலட் அறிவிப்பு