நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியின் பதிவு வைரலாகியுள்ளது. நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி இணை விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து வழங்கப்படாத நிலையில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது, ரவி மோகன் இயக்கிய ஆன் ஆர்டினரி மேன் என்கிற திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைத்து வருகிறார். இதற்கிடையே, ஆர்த்தி ரவி மறைமுகமாக ரவி மோகனைச் சாடி பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதற்கு, ரவி மோகன் பதிலடிகளும் கொடுத்தார். பின், சமூக வலைதளங்களில் இருதரப்பினரும் தாக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில், 'சூர்யா, அஜித், விக்ரம், கமல்... இவங்க எல்லாரையும் விட என் வாழ்க்கையில் வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு... ஆஸ்கார் விருது கொடுக்கலாம்” எனப் பதிவிட்டிருந்தார். இப்பதிவின் மூலம் ஆர்த்தி நடிகர் ரவி மோகனைத்தான் தாக்குகிறார் என சமூக வலைதளங்களில் இதனைப் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் ரவி மோகனின் புதிய திரைப்படம்! A post by Aarthi, the wife of actor Ravi Mohan, has gone viral.