ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான்..! - சாலமன் பாப்பையா மறைவுக்கு சிஎஸ்கே இரங்கல்!

Wait 5 sec.

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90) இன்று (செப். 11) வயது மூப்பினால் காலமானார். அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அணியான சிஎஸ்கே-வின் நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.இதுபற்றி, அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…!” தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான் தொடங்கும். எங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்த நீங்கள், நம் கொண்டாட்டங்களின் மறக்க முடியாத அங்கம்! தமிழறிஞராக, உங்கள் தமிழ்மீதான அன்பும், உங்கள் சொற்களும் பல தலைமுறைகளின் நெஞ்சில் நீங்காத தடம் பதித்தன. தமிழுக்கும், பட்டிமன்றத்துக்கும் தங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும், சாலமன் பாப்பையா அய்யா” எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…!”தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான் தொடங்கும். எங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்த நீங்கள், நம் கொண்டாட்டங்களின் மறக்க முடியாத அங்கம்!தமிழறிஞராக, உங்கள் தமிழ்மீதான அன்பும்,… pic.twitter.com/yjYKgSVxgg— Chennai Super Kings (@ChennaiIPL) September 11, 2026தமிழ் மேடையின் பொற்காலம் மறைந்தது! - சாலமன் பாப்பையா மறைவுக்கு விஜய் சேதுபதி இரங்கல்!The Chennai Super Kings team has expressed its condolences on the passing of Tamil scholar Solomon Pappaiah.