என்ஜின் கோளாறு: தில்லியில் அலையன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

Wait 5 sec.

என்ஜின் கோளாறு காரணமாக அலையன்ஸ் விமானம் தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உ.பி.யின் பிரயாக்ராஜில் இருந்து 40 பயணிகளுடன் அலையன்ஸ் விமானம் தலைநகர் தில்லிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்டது. இந்த நிலையில் விமானத்தின் ஒரு என்ஜின் திடீரென செயலிழந்ததால் அந்த விமானம் தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். பின்னர் அந்த விமானம் பொறியாளர்கள் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 40 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும் இருந்தனர். இச்சம்பவத்தால் தில்லி விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.Flightradar24.com என்ற விமானக் கண்காணிப்பு இணையதளத்தில் உள்ள தகவலின்படி, விமானம் பிற்பகல் 2.15 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.An Alliance Air aircraft, carrying 40 passengers, made an emergency landing at the Delhi airport due to an engine failure on Friday afternoon, according to a source.விரைவில் 4,500 செவிலியர்கள் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ்