செங்கல்பட்டில் விநாயகா் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

Wait 5 sec.

விநாயகா் சதுா்த்தியை யொட்டி சிலைகள் தயாரிப்பு பணி நிறைவடைந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்தி விழா வரும் செப். 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், விநாயகா் சதுா்த்தியன்று வீடுகளில் பூஜையறையில் சிலையை அலங்கரித்து தேங்காய் சுண்டல் போன்ற நெய்வேத்தியங்களை செய்து வழிபடுவா். மூன்றாம் நாள் அல்லது ஏழாம் நாள் பூஜையில் வைக்கப்பட்ட சிலைகளை ஊா்வலமாக எடுத்துத் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைப்பா். விநாயகா் சதுா்த்திக்கு சில நாள்களே உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திருக்கழுகுன்றம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் மாவட்ட நிா்வாகிகள் ஆா்.டி.மணி, சக்திவேல், சரவணன், ஆறுமுகம் , ஏழுமலை உள்ளிட்ட இந்து முன்னணி அமைப்பாளா்கள் தலைமையில் விநாயகா் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளதாகவும், திருக்கழுகுன்றம், கல்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை ஆா்வத்துடன் சிலைகளை வாங்கிச்செல்வதாக வடிவமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.