மலையாளத் திரையுலகில் முதலிடம்: வசூல் சாதனை படைத்த பெத்லகேம் குடும்ப யூனிட்!

Wait 5 sec.

நடிகர் நிவின் பாலி நடித்த பெத்லேகம் குடும்ப யூனிட் திரைப்படம் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது.இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் கடந்த ஆக .21ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. கதாநாயகனுக்கும் 10 வயது குறைவான நாயகிக்கும் இடையேயான காதல் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவானது.ஓணம் பண்டிகையன்று வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், மோகன்லாலின் எம்புரான், துடரும் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ள இப்படம் மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.கேரளத்தில் இதற்கு முன்பு அதிக வசூல் செய்த படங்களான லோகா, வாழ 2 படங்களின் வசூலை பெத்லகேம் குடும்ப யூனிட் முறியடித்துள்ளது. கேரளத்தில் மட்டும் 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் 288 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ள நிலையில், மலையாளத் திரைப்படங்கள் தொடர்ந்து இதுபோன்ற வெற்றிகளைப் பெறுவது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.Bethlehem Family Unit tops the Malayalam film industry with record-breaking box officeஎனது அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் வந்ததில் மகிழ்ச்சி: அஜித் குமார்