நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான “மண்டாடி” திரைப்படத்துக்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி”. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமையான கதைகளத்தால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று (செப். 10) வெளியான மண்டாடி படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்தப் படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளையும் பெற்றுள்ளது.விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு அடுத்த 3 நாள்களுக்கு விடுமுறை என்பதால் மண்டாடி படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற வரவேற்புகளைத் தொடர்ந்து மண்டாடி படத்துக்கு உலகம் முழுவதும் 500-க்கும் அதிகமான திரைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக, ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள “மண்டாடி” படம் ஐமேக்ஸ் தரத்திலும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Mandaadi Movie review | பந்தயம் அடித்ததா? நடிகர் சூரியின் மண்டாடி? | Soori | ReviewAdditional screens have been allocated for the film "Mandadi," starring actor Soori in the lead role.