ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கைக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

Wait 5 sec.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.இலங்கைக்கு 131 ரன்கள் இலக்கு; இறுதிப்போட்டியில் யார்?முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் ஃபாத்திமா சனா 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷாவல் ஷுல்ஃபிகர் 24 ரன்களும், குல் ஃபெரோஷா 21 ரன்களும் எடுத்தனர். துபா ஹாசன் 12 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.இலங்கை தரப்பில் கேப்டன் சமாரி அத்தப்பத்து மற்றும் சமுடி பிரபோதா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுகந்தி குமாரி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.Batting first in the Asia Cup cricket semi-final against Sri Lanka, the Pakistan team scored 130 runs for the loss of 5 wickets.இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதினாலும் கவலையில்லை: தீப்தி சர்மா