தில்லி பல்கலைக்கழம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளின் விடுதிகள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகள் குறித்த விரிவான அறிக்கை கோரி, தேசிய மனித உரிமை ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப். 9) கடிதம் எழுதியுள்ளது. தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் தங்கும் விடுதியின் கீழ்தளத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னை இருந்ததால், அதனை சரி செய்யும் பணி சட்டவிரோதமாக நடைபெற்று வந்த நிலையில், அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் பலியாகினர்.இடிந்து விழுந்த கட்டடம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், அஸ்திவராத் தூண்கள் அமைக்கப்படாமல் கட்டடம் சட்டவிரோதமாக இருந்துள்ளதும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.இதன் விளைவாக, தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகள், நிறுவனங்களில் உள்ள விடுதி உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் குறித்த விரிவான அறிக்கை கோரி, தலைமைச் செயலர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், தில்லி அரசாங்கம் ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.தற்போதுள்ள தங்கும் விடுதிகளின் அளவு மற்றும் உள்கட்டமைப்பையும், அத்துடன் புதிய மற்றும் கூடுதல் தங்கும் விடுதிகளின் தேவை மற்றும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய அறிக்கையைத் தயாரிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், “இந்தத் துயரச் சம்பவத்துக் கட்டட உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் மாணவர்களுக்குப் போதுமான தங்கும் வசதிகளை வழங்கத் தவறிய தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி பல்கலைக்கழகமும் பொறுப்பு” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.டிக்கெட் முன்பதிவு: கையறு நிலையில் ரயில் பயணிகள்!The National Human Rights Commission wrote a letter on Tuesday (Sept. 9) seeking a detailed report regarding the hostels and infrastructure of Delhi University and its affiliated colleges.