ஐசிசி டி20 போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முன்னேற்றம் கண்டுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.நடப்பு ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம், ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, தவரிசையில் 8-வது இடத்திலிருந்த அவர் தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி முதல் இடத்தில் தொடர்கிறார். சோஃபி எக்கல்ஸ்டோன், சார்லி டீன், நான்குலேகோ மிலாபா மற்றும் லாரன் பெல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.Indian player Deepti Sharma has moved up in the ICC T20 rankings for bowlers.ஆசிய கோப்பை: அரையிறுதியில் இலங்கையுடன் மோதும் பாகிஸ்தான்! இந்தியாவுக்கு யாருடன்?