துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் மூன்றாம் நாளில் இரண்டாம் செஷன் முடிவில் தென் மண்டல அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களுக்கு தடுமாறி வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் திடலில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம், 708 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்கள் குவித்தார். அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸை விளையாடும் தென் மண்டல அணி 56 ஓவர்களில் 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 532 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்றைய நாளில் ஆல் அவுட் ஆகாமல் தப்பிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் திலக் வர்மா 18 ரன்களுடனும் ஷ்ரேயாஸ் கோபால் 2 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். கிழக்கு மண்டல் அணி சார்பாக பந்துவீச்சில் முகமது ஷமி, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்கள். ஷமி வீசிட்ய 9 ஓவர்களில் 4 ஓவர்கள் மெய்டானனது குறிப்பிடத்தக்கது. Tea break: South Zone - 176/5 in 55.6 overs (Shreyas Gopal 2 off 12, Tilak Varma 18 off 59) #EZvSZ #DuleepTrophy #Final— BCCI Domestic (@BCCIdomestic) September 8, 2026Duleep Trophy Finals South Zone loses 5 wickets and Struggling at Chepauk Stadium