ஆண் - பெண் ஆணவம்... ஊர்வசியின் ஆஷா டிரைலர்!

Wait 5 sec.

நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி இணைந்து நடித்த திரைப்படத்திற்கு ஆஷா எனப் பெயரிட்டுள்ளனர். சஃபர் சனல் இயக்கிய இப்படத்திற்கு ஜோஜூவும் திரைக்கதை எழுதியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, விஜய ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஊர்வசிக்கும் ஜோஜூ ஜார்ஜுக்கும் இடையே நடக்கும் ஈகோவாக இதன் கதை எழுதப்பட்டுள்ளது. டிரைலர் காட்சிகள் திரில்லருக்கான சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வருகிற செப். 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.The trailer for the film Asha, starring Joju George and Urvashi, has been released.