தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டியிடவுள்ளதக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மு. வீரபாண்டியன் தெரிவித்ததாவது:”பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெகவை வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இயல்பானது இல்லை, மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.இடைத்தேர்தலை எதிர்கொள்வது என்ற முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே முடிவை எடுத்துள்ளது. இதை அவர்கள், எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள்.தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தக் கட்சியின் மாநில செயலர் பெ. சண்முகம் அறிவிப்பார்.இடதுசாரிகள் கூட்டணிக்கு ஜனநாயக சக்திகள் ஆதரவு அளிக்க வேண்டும். எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலை, தமிழ் மக்களின் நலன் சார்ந்த குரலை சட்டப்பேரவையில் எழுப்போம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லெனினிஸ்ட் கட்சிகள் ஒன்று சேர்ந்து வேட்பாளர்களை வரும் செப். 15 ஆம் தேதி அறிவிப்போம்” என்றார்.M. Veerapandian, State Secretary of the Communist Party of India (CPI), has announced that the CPI will contest in Dharapuram and the CPM in Maduranthakam.மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு?