திமுக எம்.பி. கனிமொழி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருக்குறள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த முதல்வா் சி. ஜோசப் விஜய்யை கண்டித்து திமுக சார்பில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நேற்று(செப். 13) நடைபெற்றது.சட்டப்பேரவையில், மு.க. ஸ்டாலினை அவமரியாதை செய்யும் வகையில் பேசியதாக, முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் நிர்மல்குமார் குறித்து, மக்களவை உறுப்பினர் ஆ. ராசா பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தன்னுடைய எக்ஸ் தள பதிவில், ”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்.கனிமொழியின் பதிவு இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் யாரைக் குறிப்பிடு கூறியிருக்கிறார் என்ற கேள்வியையும் அரசியல் நோக்கர்கள் எழுப்பி வருகின்றனர்.A Thirukkural verse posted by DMK MP Kanimozhi on X is going viral online.என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை: ஆ. ராசா பதிவு!