ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா? மு.க. ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி!

Wait 5 sec.

ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா? என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி ஞாயிற்றுக்கிழமை (செப். 13) எழுப்பியுள்ளார்.சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஆ. ராசா, அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளதாவது:மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா மு.க. ஸ்டாலின்?நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு. தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா?திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா?குழந்தைகள், பெண்களின் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம். நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” என்று அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டுள்ளார்.மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா @mkstalin?நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள் @mkstalin ?…— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 13, 2026என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை: ஆ. ராசா பதிவு!Minister Nirmal Kumar questioned former Chief Minister and DMK leader M.K. Stalin on Sunday (Sept. 13), asking if making people speak obscenely was his last resort.